“ Nature is so smart. It has put the medicine inside the food ” என்பது ஒரு பொன்மொழி. இது மருத்துவ குணம் மிகுந்த உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஆர்த்ரிடிஸ் எனும் மூட்டழற்சியால் ஏற்படும் வீக்கம், தாங்க இயலாத வலியைத் தருகிறது. இவ்வீக்கத்தை உணவுகளால் முற்றுலுமாக குணப்படுத்த இயலாது. எனினும் அவை வலியைக் குறைத்து நாம் ஏங்கும் நிவாரணத்தை நமக்கு அளிக்கின்றன.
எதிர் ஆக்ஸிகரணிகள் (Antioxidants) வைட்டமின் A, C, E ஆகியன நிறைந்த உணவுகள் வீக்கத்தைக் (Inflammation) குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த உணவுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) உருவாக்கி இறுதியில் வீக்கத்தை அதிகரிக்கும் Free Radicals ஐ எதிர்த்துப் போரிடுகின்றன.
Free Radicals என்பவை, நேர் மின்னூட்டம் பெற்ற துகள்களை இணைவதற்காகத் தேடும் எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும். நம் உடம்பு Free Radicals ஐ உருவாக்கி, அவற்றில் சிலவற்றை செயல்முறைக்கு உள்ளாக்குகிறது.
ஆனால், அதிகப்படியான Free Radicals உருவாகும்போது, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துக்குக் (Oxidative Stress) காரணமாகின்றன. இதனால் வீக்கம் உருவாகிறது. நாம் உண்ணும் உணவு கூட Free Radicals ஐ உருவாக்கி, வீக்கத்தை அதிகப்படுத்தலாம்.
உங்களுக்கு மூட்டழற்சி இருக்குமாயின், வீக்கத்தை உருவாக்கும் உணவுப் பொருட்களைக் கட்டாயம் தவிர்த்து, அதற்கு பதிலாக கீழ்க்காணும் 5 உணவுப்பொருட்களை உண்ண வேண்டும்.[/vc_column_text][divider line_type=”No Line” custom_height=”50″][vc_column_text]தாவரக் கொட்டைகள் : (Nuts)
தாவரக் கொட்டைகளில் (Nuts) புரோட்டீன் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் கொழுப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க இவை உதவுகின்றன. இவற்றில் எதிர் ஆக்ஸிகரணி (Antioxidant) மற்றும் வீக்கத்துக்கு எதிரான Alpha-linoleic acid (ALA) ஆகியன மிகுந்துள்ளன.
தாவரக் கொட்டைகளை தங்களது உணவில் கணிசமான அளவு சேர்த்துக் கொள்பவர்களுக்கு, சேர்த்துக் கொள்ளாதவர்களைக் காட்டிலும் வீக்கம் குறைவாகவே ஏற்படுகிறது.
வேர்க்கடலை நம் அனைவருக்கும் மிக எளிதில் கிடைக்கக் கூடிய மிகவும் மலிவான ஒரு உணவுப்பொருள் ஆகும். வீக்கத்தைக் குறைக்க உதவும் மெக்னீசியம் இதில் மிகவும் நிறைந்துள்ளது.
பாதாமில் வைட்டமின் E மற்றும் வீக்கத்துக்கு எதிரான ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் (Mono unsaturated fatty acids) நிறைந்துள்ளன. பழங்கள் மற்றும் கறி வகைகளுடன் சற்று பாதாமைச் சேர்த்துக் கொண்டால், உண்ணும்போது ஒருவித சுவையைத் தருவதுடன் வலியிலிருந்து நிவாரணமும் தருகிறது. பிஸ்தாவிலும் இதே குணம் நிறைந்துள்ளது.
தாவரக் கொட்டைகளைத் தொடர்ந்து உட்கொண்டால், வீக்கத்திலிருந்து நிவாரணம் கிடைப்பதை நன்கு உணரலாம்.[/vc_column_text][divider line_type=”No Line” custom_height=”50″][vc_column_text]பச்சை இலை காய்கறிகள் :
பசலைக் கீரை, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் Free Radicals- ஐ எதிர்த்துப் போரிடும் எதிர் ஆக்ஸிகரணிகளைக் (Antioxidants) கொண்டுள்ளன. அவை உருவாக்கும் வீக்கத்தைக் குறைக்கவும் காய்கறிகள் உதவுகின்றன.
பசலைக் கீரையில் கீம்ஃபெரால் சேர்மானம் (Compound Kaempferol) உள்ளது. இது முடக்குவாதத்தால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
காலிஃப்ளவர் மற்றும் முட்டைகோஸில் Sulforaphane எனும் சேர்மம் உள்ளது. உயிரணுக்களில் (Cells) நிகழும் வீக்கத்தை இச்சேர்மம் தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலிஃப்ளவர் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை அடிக்கடி உண்பதால் முடக்குவாதம் ஏற்படுவது தடுக்கப்படுவதாக வேறு சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.[/vc_column_text][divider line_type=”No Line” custom_height=”50″][image_with_animation image_url=”3610″ animation=”Fade In” hover_animation=”none” alignment=”center” border_radius=”none” box_shadow=”none” image_loading=”default” max_width=”100%” max_width_mobile=”default”][vc_column_text]பழங்கள் :
சிட்ரஸ் நிறைந்துள்ள எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் நம் உடலிலுள்ள collagen எனும் புரத நார் (Protein Fibre) சேர்மானத்துக்கு (Synthesis) உதவுகின்றன. இந்த Collagen நம் உடலிலுள்ள திசுக்கள், தசைநார்கள், எலும்புகள் ஆகியனவற்றில் நிகழும் பாதிப்புகளைச் சரி செய்வதற்கு இன்றியமையாததாகும். மூட்டழற்சியால் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போரிட Collagen உதவுகிறது.
இது மட்டுமல்ல. சிட்ரஸ் நிறைந்துள்ள பழங்களில், வீக்கத்தை எதிர்த்துப் போரிடும் வைட்டமின் C நிறைந்துள்ளது.
ஆகவே, தினமும் வைட்டமின் C உட்கொண்டு வலி நிவாரணம் பெற ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஒரு கிண்ணம் எலுமிச்சை சாதம் உட்கொள்ளலாம்.
பச்சை மற்றும் கருப்பு ஆகிய இருவகை திராட்சைகளும் மூட்டழற்சியால் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போரிட உதவுகின்றன. ஏனெனில் திராட்சையில் வீக்கத்தை எதிர்த்துப் போரிடும் ரெஸ்வரட்ரால் (Resveratrol) மற்றும் எதிர் ஆக்ஸிகரணிகள் (Antioxidants) நிறைந்துள்ளன.
ரெஸ்வரட்ரால் நம் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. ஊக்க மருந்து அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகளுடன் (NSAID) ஒப்பிடும் அளவுக்கு அழற்சிக்கு எதிரான இதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன.[/vc_column_text][divider line_type=”No Line” custom_height=”50″][image_with_animation image_url=”3604″ animation=”Fade In” hover_animation=”none” alignment=”” border_radius=”none” box_shadow=”none” image_loading=”default” max_width=”100%” max_width_mobile=”default”][vc_column_text]பீன்ஸ் :
பீன்ஸில் நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. மேலும் அவை வீக்கத்தை உருவாக்கும் C-Reactive Protein (CRP) – ஐ குறைக்க உதவுகின்றன.
பீன்ஸில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் பிற கனிமங்கள் (Minerals) வீக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாது, இதயம் மற்றும் நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
ராஜ்மா போன்ற பீன்ஸ் வகையை எளிதில் கறியாகச் சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதைக் கொதிக்க வைத்து தின்பண்டமாகவும் (Snacks) உட்கொள்ளலாம்.[/vc_column_text][image_with_animation image_url=”3605″ animation=”Fade In” hover_animation=”none” alignment=”” border_radius=”none” box_shadow=”none” image_loading=”default” max_width=”100%” max_width_mobile=”default”][vc_column_text]மஞ்சள் :
இந்தியர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒரு பொருள் மஞ்சள். மஞ்சள் இல்லாது எந்த இந்தியக் குடும்பமும் இல்லை எனும் அளவுக்கு மஞ்சள் முக்கியத்துவம் வாய்ந்தது. பல மகத்துவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால், மஞ்சளின் பெருமையை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஜூலை 14-ம் நாள் மஞ்சள் தினம் என சமீபகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மஞ்சள் மற்றும் அதன் கூட்டுப் பொருட்கள் மூட்டழற்சியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2016 இல் மஞ்சள் மற்றும் அதன் கூட்டுப் பொருட்கள் மூட்டழற்சிக்கு எதிராக ஆற்றும் செயல்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மஞ்சளில் காணப்படும் Curcumin எனும் வேதிப்பொருளை நாளொன்றுக்கு 1000 மில்லி கிராம் வீதம் 1.5 முதல் 3 மாதங்கள் வரை உட்கொண்டால், மூட்டழற்சியால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறைவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட அறிஞர்கள் முடிவுக்கு வந்தனர்.
மஞ்சளில் காணப்படும் Curcumin எனும் வேதிப்பொருள், வீக்கத்துக்கு எதிராக பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளான Ibuprofen (Advil) மற்றும் Diclofenac (Voltaren) – ஐ விட மிகவும் வலிமையாகச் செயல்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர்.
மஞ்சளில் காணப்படும் வேதிப்பொருட்கள் வீக்கத்தை உருவாக்கும் காரணிகளைத் தடுத்து, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளோர், தொடர்ந்து செய்து வரும் உடற்பயிற்சி சிகிச்சைகள் (Physiotherapy) நீங்கலாக, மஞ்சளையும் கூடுதல் உணவாகச் சேர்த்துக் கொள்லலாம் என இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது.
வெறும் வீக்கத்தைத் தடுப்பதைக் காட்டிலும், மூட்டழற்சியைத் தடுப்பதில் மஞ்சள் மிக வலிமையாகச் செயலாற்றுவதாக 2006 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கண்டறிந்தது.
மஞ்சள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதேவேளை அது இரத்த மெலிவூட்டியாகவும் (Blood thinner) செயலாற்றுகிறது. இரத்த மெலிவூட்டி என்பது நம் உடலில் இரத்த உறைவு ஏற்படாமல் தடுத்து, இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும் மருந்தாகும். இத்தகைய குணாதிசயத்தை மஞ்சள் கொண்டுள்ளது என்பது சுவாரஸ்யமே. இரத்த மெலிவூட்டிகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அவ்வப்போது மஞ்சளை பயன்படுத்துவது நல்லது.
[/vc_column_text][divider line_type=”Full Width Line” line_thickness=”1″ divider_color=”extra-color-gradient-1″ animate=”yes” custom_height=”20″][vc_column_text]முடிவுரை :
Free Radicals ஆல் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் (Oxidative Stress) வீக்கம் உருவாகலாம். எதிர் ஆக்ஸிகரணிகள் (Antioxidants) நிறைந்துள்ள வைட்டமின் A, C, E மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ள உணவுப்பொருட்கள் மூட்டழற்சியால் ஏற்படும் வீக்கத்தின் பாதிப்புகளைக் குறைக்க உதவுகின்றன.
வீக்கத்தைக் குறைத்து வலியிலிருந்து நிவாரணம் தரும் 5 உணவுப்பொருட்கள் :
தாவரக் கொட்டைகள் (Nuts) : வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா. பெரும்பாலான தாவரக் கொட்டைகள் வீக்கத்துக்கு எதிரான ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களைக் (Mono unsaturated fatty acids) கொண்டுள்ளன.
பச்சை இலை காய்கறிகள் : பசலைக் கீரையில் Kaempferol உள்ளது. முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவரில் Sulforaphane உள்ளது. மேலும் இவை முடக்குவாதம் ஏற்படுவதைத் தடுக்கின்றன.
பழங்கள் : சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது வீக்கத்தை எதிர்த்துப் போரிட உதவுகிறது. இதயத்துக்கு நலம் தருவதும் வீக்கத்துக்கு எதிரானதுமான ரெஸ்வெராட்ரால் (Resveratrol) திராட்சையில் நிறைந்துள்ளது.
பீன்ஸ் : இவை நார்ச்சத்து மிகுந்தவை. வீக்கத்தை உருவாக்கும் காரணியான C-Reactive Protein ஐ எதிர்த்துப் போரிடுபவை.
மஞ்சள் : மஞ்சளில் நிறைந்துள்ள Curcumin வீக்கத்தைக் குறைக்க உதவி, மூட்டழற்சியைத் தடுக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களும் நம் வீடுகளில் மிகச் சாதாரணமாகக் கிடைப்பவை. ஆகவே இவற்றை நம் உணவில் ஒரு முக்கிய அங்கமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
“ மருந்தையே உணவாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமாயின், உணவையே மருந்தாக உட்கொள்ள வேண்டும் ” என்பது ஒரு பொன்மொழி. இதை மனதிற்கொண்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உண்டு, வீக்கம் மற்றும் வலியிலிருந்து விடுபடுவோம்.
ஆர்த்ரிடிஸ் எனும் மூட்டழற்சி நீங்கலாக, உங்கள் உடலில் வேறு ஏதேனும் நோய்கள் இருப்பின், அல்லது சில உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் ஒவ்வாமை (Allergy) இருப்பின் உங்களது மருத்துவர் அல்லது உணவியல் வல்லுனரை (Dietician) அணுகி உங்களது உடல்நிலைக்கு ஏற்ற உணவு குறித்துத் திட்டமிடவும்.
ஆர்த்ரிடிஸ் நீண்ட நாட்களாக இருப்பின், அதிலிருந்து நிவாரணம் பெற, சென்னை ஆர்த்தோவின் உதவியை நாடவும். சென்னையில் அமைந்துள்ள எங்களது சென்னை ஆர்த்தோவுக்கு, தி.நகர், வேளச்சேரி, கே.கே.நகர், M.R.C நகர், ஆழ்வார்பேட்டை மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் கிளைகள் அமைந்துள்ளன.
ஆர்த்ரிடிஸ் எனும் மூட்டழற்சியுடன் நீண்ட காலம் போராடிய எண்ணற்ற நோயாளிகள் வலியிலிருந்து விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நாங்கள் உதவியுள்ளோம்.
இக்கட்டுரை தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின், மற்றவர்களுக்கும் இதைப் பகிரவும்.[/vc_column_text][divider line_type=”Full Width Line” line_thickness=”1″ divider_color=”extra-color-gradient-1″ animate=”yes” custom_height=”20″][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” bg_image=”3598″ bg_position=”left top” bg_repeat=”no-repeat” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none” shape_type=””][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” centered_text=”true” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” column_border_width=”none” column_border_style=”solid” bg_image_animation=”none”][nectar_btn size=”small” button_style=”regular” button_color_2=”extra-color-gradient-1″ icon_family=”none” text=”If you are allergic to certain foods, consult your doctor or dietician” margin_top=”40%” margin_bottom=”40%” url=”https://chennaiortho.com/our-team”][/vc_column][/vc_row]